விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சதுர்த்தி விழாவினை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

Update: 2022-08-30 21:44 GMT

சதுர்த்தி விழாவினை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் இன்று (புதன்கிழமை) சதுர்த்தி விழாவிைன முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. சாத்தூர் அருகே வன்னிமடை விநாயகர் கோவில், விருதுநகர் கடைவீதியில் வேலாயுத தேவர் பிள்ளையார் கோவில், நரிக்குடி அருகே புளிச்சிகுளம் பஞ்சமுக விநாயகர் கோவில், பாப்பணம் கிராமத்தில் உள்ள இரட்டை விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

அதேபோல ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ள பி. எஸ். கே. நகர் மலைமுந்தல் விநாயகர் கோவில், ஆதி வழி விடு விநாயகர் கோவில், கருப்ப ஞானியார் கோவிலில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் கோவில், தாணிப்பாறை விளக்கில் அமைந்துள்ள அரச மரத்தடி விநாயகர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் சர்வமங்கள வர சக்தி விநாயகர் கோவில், திருவண்ணாமலை அடிவாரத்தில் உள்ள பெரிய விநாயகர் கோவில், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் உள்ள சிவகங்கை விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்து முன்னணி சார்பில் 33 வார்டுகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அருப்புக்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரம் தாதன்குளம் விநாயகர் கோவில், படித்துறை விநாயகர் கோவில், முக்தி விநாயகர் கோவில், கேது விநாயகர் கோவில், மாணிக்க விநாயகர் கோவில், பெரிய தும்மக்குண்டு கிராமத்தில் விநாயகர் கோவில், , திருச்சுழி, பனையூர், மறைகுளம், குலசேகரநல்லூர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இன்று இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள், பூஜை பொருட்கள் வாங்கும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்