மலைக்கோட்டை, செப்.19-
திருச்சி ஓயாமரியில் சுடுகாடு பகுதியில் உள்ள குரு அரிச்சந்திர பைரவர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.