மாநில தரவரிசை இறகுபந்து போட்டியில் ஈரோடு வீரர் வெற்றி

மாநில தரவரிசை இறகுபந்து போட்டியில் ஈரோடு வீரர் வெற்றி;

Update:2022-08-20 01:58 IST

ஈரோடு

தமிழ்நாடு மாநில தரவரிசைக்கான இறகுபந்து போட்டி திருப்பூரில் நடந்தது. 17 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்கம் சார்பில் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 19 வயதுக்கு உள்பட்டோர் இரட்டையர் பிரிவில் ஈரோடு வீரர் பரத் சஞ்சய் மற்றும் திருச்சி வீரர் மாதவன் ஆகியோர் இணைந்து விளையாடினார்கள். இந்த ஜோடி சிறப்பாக ஆடி முதல் பரிசினை வென்றது. இதுபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஈரோடு வீரர் பரத் சஞ்சய் விருதுநகரை சேர்ந்த ரீவா இவாஞ்சலினுடன் இணைந்து விளையாடினார். இந்த இணை சிறப்பாக விளையாடி முதல் பரிசினை வென்றது. வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு இறகுபந்து சங்க செயலாளர் வீ.அருணாச்சலம் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இதுபோல் ஈரோடு வீரர் பிரேம் குமார் 19 வயதுக்கு உள்பட்டோர் கலப்பு இரட்டையர் பிரிவிலும், வீரர் விநாயகம் 17 வயதுக்கு உள்பட்டோர் ஒற்றையர் பிரிவிலும் இறுதி போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

இந்த வீரர்களுக்கு ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்க தலைவர் ராஜா என்கிற செல்லையன், செயலாளர் சுரேந்திரன், இணை செயலாளர் கே.செந்தில்வேலன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்