வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-03-05 00:15 IST

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர், கமிஷனர் சந்திப்பு

கோவையில் சிட்கோ தொழிற்பேட்டையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை நேற்று கலெக்டர் கிராந்திகுமார், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து நம்பிக்கையூட்டினர். பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:-

சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவால் வடமாநிலத் தினர் ஒருவித கலக்கத்தில் இருந்தனர். இங்கு அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என நாங்கள் கூறினோம்.

இந்தி மொழியிலும் துண்டுபிரசுரம் கொடுக்கப்பட்டு உள்ளது. கோவை ரெயில்நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் வடமாநில தொழி லாளர்களுக்கு இந்தி மொழி பேசும் அதிகாரிகளை வழிகாட்டிக ளாக அமைத்து தைரியம் ஊட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவறான வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

ஒரு வழக்கு பதிவு

வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பரப்புபவர்களை கண்காணித்து வருகிறோம்.

இது போன்று தவறான வதந்தி பரப்பி யதாக கோவை மாநகர போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதில் தொடர்பு உடையவரை கைது செய்ய பீகாருக்கு தனிப்படை விரைந்து உள்ளது. வீடியோவை மார்பிங் செய்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லை.

வடமாநில தொழிலாளர்கள் நம்முடைய விருந்தினர்கள் என்ற தகவலை தெரிவித்து வருகிறோம்.

தவறான வதந்தி பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்.

ரோந்து பணிகள் தீவிரம்

நகரில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கூடுதல் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒரு காவல் நிலையத்துக்கு 2 ரோந்து வாகனங்கள் மூலமும், இருசக்கர வாகனங்கள் மூலமும் ரோந்து செல்வார்கள். வடமாநில தொழி லாளர்கள் 99 சதவீதம் பேர் எந்தவித பிரச்சினையும் இல்லை என்கிறார்கள். ஆனால் தவறான தகவல் காரணமாக அச்சம் அடைந்து உள்ளனர். அந்த அச்சத்தை போக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்