விஜயதசமியையொட்டி அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

விஜயதசமியையொட்டி அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

Update: 2023-10-24 19:00 GMT

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதால், பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வியை இந்த நாளில் தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் விஜயதசமியையொட்டி குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சி நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் நேற்று மாணவர் சேர்க்கை தொடங்கியது. ராமாபுரம் புதூர் அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி துணைத்தலைவர் பூபதி தலைமை தாங்கினார். அங்கன்வாடி பணியாளர் துளசிமணி, மாணவ, மாணவிகளுக்கு பச்சரிசியில் முதல் எழுத்தாக `அ' எழுத கற்றுக்கொடுத்தார். இதேபோல் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் தங்கள் குழந்தைகளை, பெற்றோர் ஆர்வமுடன் அழைத்து வந்து சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்