குடும்ப செலவுக்கு கணவர் பணம் கொடுக்காததால்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஊத்தங்கரை அருகே குடும்ப செலவுக்கு கணவர் பணம் கொடுக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-05 01:15 IST

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே உள்ள எக்கூரை சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவரது மனைவி கார்த்திகா (வயது 24). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். அரவிந்தசாமி பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். ஆனால் அவர் குடும்ப செலவுகளுக்காக தனது மனைவிக்கு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த கார்த்திகா, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்