ரிஷிவந்தியம் சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ரிஷிவந்தியம் சூரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனா்.;

Update:2023-08-21 00:15 IST

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த சூரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து, மகாலட்சுமி யாகம், நவகிரக யாகம், வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பனம் நடந்து முதல் காலயாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 7 மணியளவில் 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்து, கோ பூஜை, தன பூஜை, தத்துவார்ச்சனை, நாமசந்தனை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவில் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சா மி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்