கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகரில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-27 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட திருப்பூர் குமரன் நகர் பகுதியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ரூ.1 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநிலத் துணைத் தலைவர் மாரிமுத்து, தாலுகா இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா பயன்பாட்டினை தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுப்பிரமணியன், செல்வகணேஷ், சங்கரன், நாராயணன், மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்