தமிழ்நாடு தின சிறப்பு இசை நிகழ்ச்சி
தூத்துக்குடியில் தமிழ்நாடு தின சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது;
உலக இசை தினம் மற்றும் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டு துறை சார்பில் இசைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் சிறப்பு இசை நிகழ்ச்சி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நேற்று நடந்தது. விழாவுக்கு அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமசெல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் விஜயலட்சுமி, தென்னக வில்லிசை கிராமிய கலைஞர்கள் மறுமலர்ச்சி சங்கம் ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து சிறப்பு இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.