டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.;

Update:2026-01-20 06:51 IST

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசனப்பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நேற்று இரவு 10 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடிக்கு கீழ் குறைந்து உள்ளது. குறிப்பாக வினாடிக்கு 65 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. அதேநேரத்தில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 96.91 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்