தாமிரபரணி குடிநீர் வினியோகம்

ஏரல் அருகே ஆலடியூர் கிராமத்தில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.;

Update:2023-01-08 00:15 IST

ஏரல்:

ஏரல் அருகே உள்ள பெருங்குளம் பேரூராட்சி 15-வது வார்டு ஆலடியூர் கிராம மக்கள் நீண்ட நாட்களாக தாமிரபரணி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கிராம மக்களுக்கு தாமிரபரணி ஆற்றுக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். ஆலடியூரில் புதிய நல்லி அமைத்து தாமிரபரணி குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெருங்குளம் அ.தி.மு.க. நகர செயலாளர் வேதமாணிக்கம், பேரூராட்சி கவுன்சிலர் மாயன், வார்டு செயலாளர் ஜெயமுருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்