முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்;

Update:2022-09-26 00:15 IST

மகாளய அமாவாசையையொட்டி குற்றாலத்தில் திரளானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நேற்று மகாளய அமாவாசையையொட்டி புனித தலங்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவிக்கரையில் நேற்று காலை முதல் திரளானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மெயின் அருவியில் தற்போது குறைவான அளவு தண்ணீர் வருகிறது. அதில் குளித்துவிட்டு புரோகிதர்களிடம் தர்ப்பணம் கொடுத்தனர்.

தற்போது சீசன் முடிந்த நிலையில் அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் குறைவான அளவில் இங்கு வந்து குளித்து செல்கிறார்கள். நேற்று அமாவாசையை முன்னிட்டு அதிக அளவில் அருவிகளில் குளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்