ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

Update: 2023-09-05 17:54 GMT

திருப்பத்தூர் டவுன் 36-வது வார்டு பகுதியில் உள்ள திருமால் நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான மூ.வெற்றிகொண்டான் கலந்துகொண்டு தனது சொந்த செலவில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கினார்.

இதில் தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி, வட்டார கல்வி அலுவலர் நெடுஞ்செழியன், கல்விக்குழு தலைவர் பாலா மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்