விஷம் தின்று இளம்பெண் தற்கொலை

தாய் இறந்த துக்கத்தில் இளம்பெண் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-08-24 01:00 IST

அரிமளம் அருகே கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மகள் அமுதா (வயது 25). இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் அமுதா இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி பேஸ்டை (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அமுதா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்