கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-12-21 00:15 IST

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே அரவேனு பஜார் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக பாக்கெட்டில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கையும், களவுமாக போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அரவேனு கேத்தரின் பால்ஸ் பகுதியை சேர்ந்த செல்வா (வயது 22) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்