வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை;

Update:2023-08-18 02:15 IST

சுல்தான்பேட்டை

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜாப் அலி(வயது 21). இவர் சுல்தான்பேட்டை அருகே வீ.மேட்டூரில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் விடுதியில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ராஜாப் அலி தனது உறவினர் ஒருவரின் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது அவர்களது பெற்றோருக்கு தெரியவந்ததால், இரு வீட்டாருக்கும் இடையே தகராறு

ஏற்பட்டது. இதனால் தனது காதல் முறிந்து விடும் என்று மனவேதனை அடைந்த ராஜாப் அலி நேற்று முன்தினம் இரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்