நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்னஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எட்டியானூர் கிராமத்தில் உள்ள புள்ள முனியப்பன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றம், கங்கணம் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சாமி பூக்கூடை அழைப்பு நிகழ்ச்சி, மூலவருக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மூலவர் முப்பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் எட்டியானூர், ஆவரங்காட்டூர், பாறைக்கொட்டாய், கரியகவுண்டன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.