பரமத்திவேலூர்மகா பகவதியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Update:2023-01-31 00:15 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மகா பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக 8-ஆம் ஆண்டையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து விநாயகர், மகா பகவதியம்மன், மற்றும் முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மகா பகவதியம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்