தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மேல் தோப்புத்தெருவில் அமைந்துள்ள ராமாயி, பூமாயி சமேத முனியப்ப சாமி கோவில் மாசி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தன. இந்த விழாவில் பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.