சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

ஏத்தாப்பூரில்சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.;

Update:2023-03-14 01:29 IST

சேலம்

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்ட நதிக்கரையில் தென்பகுதியில் இருக்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது போன்று பூச்சாட்டுதல் விழா நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழாவிற்கான பூச்சாட்டுதல் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக உரிய அனுமதியுடன் யானை வரவழைக்கப்பட்டு அதன் மீது பூச்சாட்டுதலுக்கான பூக்களை எடுத்து வரப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடைகளிலும், தட்டுகளிலும் பூக்களை ஏத்தாப்பூர் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சாட்டினர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்