தாமரை குளத்தில் தெப்பல் உற்சவம்

ஜோலார்பேட்டை அருகே தாமரை குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.;

Update:2023-08-03 23:56 IST

ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி தாமரை குளத்தில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி பெருக்கு விழாவான நேற்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து தாமரை குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பல் 3 முறை சுற்றி வந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தாமரை குளம் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்