பழனி முருகன் கோவிலில் சி.வி.சண்முகம் எம்.பி. சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் சி.வி.சண்முகம் எம்.பி. சாமி தரிசனம் செய்தார்.;

Update:2022-12-19 22:58 IST

பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள் அவ்வப்போது வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் இன்று பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். பின்னர் சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தார். அதைத்தொடர்ந்து தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு தங்கதேரை இழுத்து வழிபட்டார். பின்னர் மீண்டும் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்து காரில் புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்