முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.;
சென்னை,
சென்னை, தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. அனைத்துத்துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பது தொடர்பான அவசர சட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 6வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.