கார் கவிழ்ந்து வாலிபர் பலி

வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.;

Update:2022-05-21 23:58 IST

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரியை அடுத்த தெற்கு சத்திரம் மங்கம்மா சாலை தெருவைச் சேர்ந்தவர் வைரவசாமி (வயது 25). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 7 பேருடன் காரில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக புறப்பட்டு சென்றார். அந்த காரை பூமாரிமுத்து (34) ஓட்டிச் சென்றார்.

வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் என்ற அருளாட்சி பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வைரவசாமி, அவருடைய நண்பரான வைரம் (24) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களுக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் வைரவசாமி பரிதாபமாக இறந்தார். வைரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காரில் இருந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்