ஓமலூரில்சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது

ஓமலூரில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.;

Update:2023-10-10 01:41 IST

ஓமலூர்

சேலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் கடத்தூருக்கு சரக்கு வேன் ஒன்று தவிடு ஏற்றிக்கொண்டு சென்றது. ஓமலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் வரும்போது சரக்கு வேனின் டயர் வெடித்தது. இதில் சரக்கு வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார். இதனால் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்