மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 36 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 36 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.;

Update:2023-09-05 00:15 IST

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 423 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68 ஆயிரத்து 400 மதிப்பில் தையல் எந்திரங்களும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 400 மதிப்பில் திறன்பேசியும், 4 பேருக்கு ரூ.36 ஆயிரத்து 200 மதிப்பில் 3 சக்கர மிதிவண்டியும், 12 பேருக்கு புதிரை வண்ணார் சாதிச்சான்றிதழ் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்