சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினர்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தேசிய கொடி ஏற்றினர். இதில் 321 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 27 ஆயிரத்து 930 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Update: 2022-08-15 17:20 GMT

கள்ளக்குறிச்சி

சுதந்திர தின விழா

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலையில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் பறக்க விட்ட அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 321 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 27 ஆயிரத்து 930 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 174 அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், திட்ட இயக்குனர் மணி, கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், நகராட்சி தலைவர் சுப்ராயலு, முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசன், நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்