ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்

வெடிவிபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.;

Update:2023-10-13 23:06 IST

தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள ஓசூர் அத்திப்பள்ளி பகுதியில் நடந்த பட்டாசு விபத்தில் வாணியம்பாடியை அடுத்த வெள்ளகுட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 24), நித்தீஷ் (26), ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தினேஷ்குமார் (17) காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் இறந்த தினேஷ்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்திருந்த ரூ.3 லட்சத்திற்கான காசோலையை நேற்று மாலை வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் அவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்