பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட் டி பகுதி
தினத்தந்தி புகாா் பெட் டி பகுதி;
ஆபத்தான குழி
ஈரோடு சூளை பிச்சைக்காரன்பள்ளம் ஓடை அருகே ஆபத்தான குழி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. மேலும் இந்த குழியில் விழுந்து விட நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவா, ஈரோடு.
ரோட்டில் உண்டியல்
அந்தியூர் பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10 உண்டியல்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு உண்டியல் கோவில் முன்பு உள்ள ரோட்டில் எந்த வித பிணைப்புமின்றி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மர்மநபர்கள் உண்டியலை அப்படியே எடுத்து தூக்கி செல்ல வாய்ப்பு உள்ளது. உடனே உண்டியலை கோவிலுக்குள் பாதுகாப்பான இடத்தில் வைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், அந்தியூர்.
பாதாள சாக்கடை பராமரிக்கப்படுமா?
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு சிக்னலில் பாதாள சாக்கடை சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து வெளியில் கொப்பளித்து வருகிறது. இதன் காரணமாக ரோட்டில் மழை தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடையை சரியாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
பாராட்டு
கோபி சக்தி சாந்தி நகரில் உள்ள நகராட்சி பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளித்தது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது பூங்கா சுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.