கம்பி வேலியில் சிக்கி மான் சாவு

கலவை அருகே கம்பி வேலியில் சிக்கி மான் இறந்தது.;

Update:2023-06-19 23:22 IST

திருவண்ணாமலை மாவட்டம் மோரணம், அரும்பருத்தி, தளரப்பாடி, புளிந்தை போன்ற கிராமங்கள் அருகே காட்டுப்பகுதிகளில் மான்கள் உள்ளன. இங்கிருந்து ஒருமான் வழிதவறி சென்னசமுத்திரம் மோட்டூர் அருகே உள்ள மாந்தோப்பிற்கு சென்றுள்ளது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் சிக்கி இறந்துள்ளது. இதை பார்த்த கிராம நிர்வாக அதிகாரி விஜி கலவை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி, கலவை கால்நடை மருத்துவரை வரவழைத்து மைன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்