உடற்பயிற்சி செய்த என்ஜினீயர் மயங்கி விழுந்து சாவு
பாப்பநாயக்கன்பாளையத்தில் உடற்பயிற்சி செய்த போது என்ஜினீயர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.;
பாப்பநாயக்கன்பாளையத்தில் உடற்பயிற்சி செய்த போது என்ஜினீயர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஐ.டி. ஊழியர்
சேலம் சையதுகாதர் தெருவை சேர்ந்தவர் அறவாளி. இவருடைய மகன் தாயுமானவன் (வயது 27). என்ஜினீயர். இவர் கோவை பாப்பநாயக்கன்பாளைத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழி யராக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார்.
இவர் தினமும் காலையில் தனது நண்பர்களுடன் உடற்பயற்சி செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் தாயுமானவன் தான் தங்கி இருக்கும் வீட்டில் நண்பர்க ளுடன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார்.
பரிதாப சாவு
அப்போது அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அதை பார்த்து அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தாயுமானவனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடற்பயிற்சி
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாயுமானவன், கடந்த 2 நாட்களாக வேலை காரணமாக சரியான தூங்கவில்லை. ஆனாலும் அவர் காலை எழுந்து வழக்கம் போல் உடற்பயிற்சி செய்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, தாயுமானவனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.