பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-26 18:45 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி மாவட்டம் எம்.சவுளுரை சேர்ந்தவர் கலையரசி (வயது 32). இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

அவர் கொடுத்த கோரிக்கை மனுவில், நான் எங்கள் ஊரில் ஏரிக்கரை அருகே 20 வருடமாக குடியிருந்து பால் வியாபாரம் செய்து வருகிறேன். வீடு பட்டா நிலத்தில் இருக்கும் பட்சத்தில் வழிப்பாதை புறம்போக்கு நிலத்தில் இருப்பதால் சிலர் புறம்போக்கு நிலத்தில் இருக்கும் வழிப்பாதையை அடைத்து விட்டனர். இதனால் வீட்டிற்கு செல்வதற்கு பாதை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் வேலைக்கு வெளியே செல்வதற்கும் வருமானத்துக்கும் வழி இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே வழிப்பாதை அமைத்து தர வேண்டி அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் வழிப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பெண் விசாரணைக்காக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்