தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு..!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2022-10-06 08:52 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதுசெய்யப்பட்டு உள்ளதாக காதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 481 ஆக இருந்த டெங்கு பாதிப்பு செப்டம்பர் மாதத்தில் திடீரென அதிகரித்து 572 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பருவமழை காலகட்டத்தில் இது மிக தீவிரமாக பரவும் என்பதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்துதல்,, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் சுகாதாரத்துறையால் வழங்கப்பட்டு உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்