வாலிபரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

நெல்லையில் வாலிபரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-12-03 02:23 IST

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் தனது நண்பர் பெருமாள் என்பவருடன் நெல்லை வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவை சேர்ந்த பேராட்சி செல்வம் (26) என்பவர் அவர்களிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து மாரியப்பன் பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் வழக்குப்பதிவு செய்து பேராட்சி செல்வத்தை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்