குழித்துறை:
மார்த்தாண்டம் வெட்டுமணியில் மேம்பாலத்துக்கு கீழே உள்ள தூணின் அருகே சம்பவத்தன்று மயங்கிய நிலையில் 65 வயது முதியவர் கிடந்தார். மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் ராஜகோபால் (58) என்பவர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். அவர் பெயர் அசோகன் என்று தெரிய வந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.