ரூ.10 லட்சம் கேட்டு மூதாட்டிக்கு கொலை மிரட்டல்

ரூ.10 லட்சம் கேட்டு மூதாட்டிக்கு கொலை மிரட்டல்;

Update:2023-05-25 01:15 IST

கோவை

கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவருடைய மனைவி ராமாத்தாள் (வயது 72). இவர்களுடைய மகள் கோகிலா திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கோகிலா, அவருடைய கணவர் கண்ணன், மகன் மோனிஷ் ஆகியோர் சேர்ந்து ராமாத்தாளிடம் ரூ.10 லட்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கோகிலா, அவரது கணவர் கண்ணன் மற்றும் மோனிஷ் ஆகியோர் சேர்ந்த ராமாத்தாளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமத்தாள் வெறைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் விசாரணை நடத்தி ராமத்தாளுக்கு கொலை மிரட்டல் விடுத்த கோகிலா, கண்ணன், மோனிஷ் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்