வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருச்சியில் தொடங்கியுள்ள இந்த நடைபயணம் மதுரையில் நிறைவு பெறுகிறது.;

Update:2026-01-02 12:44 IST

திருச்சி,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் இன்று முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். திருச்சி மாவட்டம் தென்னூர் உழவர் சந்தை அருகே நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

நடைபயண தொடக்க விழாவில் திருமாவளவன், துரை வைகோ, காதர் மொய்தீன், கமல்ஹாசன் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மதுரையில் இந்த நடைபயணம் நிறைவுபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 600 பேருடன் 15 முதல் 17 கி.மீ. வரை நடக்க வைகோ திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வைகோவின் இந்த நடைபயண நிகழ்ச்சியை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

மேலும் செய்திகள்