முதல்-அமைச்சரின் அறிவிப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை: ஜாக்டோ-ஜியோ

மகிழ்ச்சியான செய்தியை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.;

Update:2026-01-02 13:28 IST

சென்னை,

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி 6-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினருடன் அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, தலைமை செயலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது;

”எங்களது கோரிக்கைகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோரிடம் தெரிவித்தோம். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை முதல்வர் அறிவிப்பார் என்றும், பழைய ஓய்வூதிய விவகாரத்தில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முதல்வர் என்ன சொல்ல போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது. 48 ஆயிரம் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். 9 ஆண்டு போராட்டத்திற்கு நாளை நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்.”

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்