அவசர சிகிச்சை பிரிவில் மதுபாட்டில்கள்: அரசு மருத்துவமனையா? மதுபான விடுதியா? - எச்.ராஜா கேள்வி
மருத்துவமனையில் இரவு நேர மருத்துவ பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை என செய்திகள் வருவதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-,
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனிகள் நிறைந்திருந்த காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.
மருத்துவமனையில் இரவு நேர மருத்துவ பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை என செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பள்ளிக்கூட வளாகம் தொடங்கி மருத்துவமனை வரை போதை பரவலாக்கல் தொடர்வது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் பதிலளிப்பார்களா?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.