வைகை ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

கடமலைக்குண்டுவில் வைகை ஆற்றில் மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-04-26 03:00 IST

கடமலைக்குண்டுவில் உள்ள வைகை ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடமலைக்குண்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு வைகை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் ஒருவர் சாக்கு பைகளில் மணல் அள்ளியது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் (வயது 55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 23 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்