லாரி மோதி வாலிபர் பலி

சேலம் சின்னகொல்லப்பட்டி அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்.;

Update:2023-03-19 01:12 IST

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21). இவர் நேற்று இரவு அழகாபுரம் பகுதியை சேர்ந்த நண்பரான தினகரன் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஏத்தாப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தினகரன் ஓட்டினார். இவர்கள் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த தினகரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்