அய்யலூர் அருேக மினி வேன் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
அய்யலூர் அருேக மினி வேன் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.;
புதுச்சேரி மாநிலம் திருக்கண்ணூர் அருகே உள்ள வாதானூர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 50). புளி வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவர், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள எஸ்.பூசாரிப்பட்டிக்கு புளி வாங்குவதற்காக தனது மினி வேனில் வந்தார்.
அப்போது அய்யலூரில் உள்ள கடவூர் பிரிவு அருகில் கஜேந்திரன் தனது வேனை நிறுத்தி உணவு சாப்பிட்டுவிட்டு, அங்குள்ள கடை அருகே படுத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கஜேந்திரன் வேனுக்குள் பார்த்தபோது, உள்ளே வைத்திருந்த ரூ.97 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து கஜேந்திரன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.