பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ செலவு ரூ.3 லட்சத்தை வழங்க வேண்டும்

பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ செலவு ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.;

Update:2023-03-24 00:15 IST

பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ செலவு ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

இருதய நோயால் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொன்ராம் கணேசன் கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும் பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் கிளையில் ரூ.9,545 செலுத்தி எனது குடும்பத்தின ருக்கு மருத்துவ காப்பீடு செய்திருந்தேன்.

இந்த நிலையில், 2017 ஏப்ரல் 2-ந் தேதி இருதய நோய்க்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்த உடன் காப்பீட்டு நிறுவனத ்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தேன்.

நோட்டீஸ் அனுப்பினேன்

முதலில் சிகிச்சைக்கு சேர்ந்த போது ஆம்புலன்சுக்கு ரூ.3 ஆயிரம், மருத்துவ செலவாக ரூ.3.19 லட்சம், 2-வது முறை அனுமதிக்கப் பட்ட போது ரூ.1.20 லட்சம் செலவானது. அதற்கு உரிய ஆவணங் களுடன் காப்பீடு கோரி விண்ணப்பித்தேன்.

ஆனால் காப்பீட்டை மறுத்து அவர்கள் எனக்கு கடிதம் அனுப்பினர். எனவே பாலிசி விதிமுறைகளின்படி அவர்கள் நான் செலவு செய்த தொகையை முழுமையாக அளிக்க வேண்டும் என்று 2017 நவம்பர் 14-ந்தேதி நோட்டீஸ் அனுப்பினேன்.

அதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, நான் மருத்துவ கட்டணமாக செலுத்திய தொகை, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

மருத்துவ செலவு

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு செய்துள்ளார். காப்பீட்டு விதிமுறையின்படி, காப்பீடு எடுத்ததில் இருந்து முதல் 30 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் மருத்துவ செலவை அளிக்க இயலாது என்று கூறி காப்பீட்டு நிறுவனம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேதியானது தவறுதலாக 2017 ஏப்ரல் 2-ந் தேதி என்பதற்கு பதில் மார்ச் 2-ந் தேதி என குறிப்பிடப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது.

திருப்பி அளிக்க வேண்டும்

மேலும், ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது மனுதாரருக்கு ஏற்பட்ட பாதிப்பானது காப்பீடு செய்யப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

ஆவணங்களை வைத்து பார்க்கும்போது மனுதாரர் முதலில் செலவு செய்த ரூ.3.19 லட்சத்தை திருப்பி அளிக்க மட்டுமே கோரிக்கையை சமர்ப்பித்து உள்ளார்.

எனவே, மருத்துவ கட்டணமாக மனுதாரர் செலுத்திய ரூ.3.19 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்