வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கியது

கடலூரில் வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கியது.;

Update:2023-02-03 00:15 IST

கடலூர் முதுநகர், 

கடலூர் மீனவர்கள், ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு நேற்று கரைக்கு திரும்பினர். அவர்களது வலையில் வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கி இருந்தது. இது பற்றி மீனவர்கள் கூறுகையில், வழக்கமாக கொம்பன் திருக்கை, புள்ளி திருக்கை, செந்திருக்கை ஆகிய திருக்கை மீன்கள் பிடிபடுவது வழக்கம். ஆனால் தற்போது வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கி உள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. 25 கிலோ எடை கொண்ட இந்த திருக்கை மீனை பெங்களூருவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்