தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடி அகற்றும் பணி

தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடி அகற்றும் பணி நடந்தது.;

Update:2023-08-16 01:07 IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தாமிரபரணி ஆற்றங்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். அவர்கள் வந்து செல்ல ஏதுவாக நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள குட்டத்துறை முருகன் கோவில் படித்துறைகளை சுத்தம் செய்து தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அமலைச்செடிகளையும் அகற்றும் பணிகள் நடந்தது. இதை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர் கந்தன், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்