விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி;

Update:2023-07-11 02:30 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூத்துக்குளியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவர் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் அய்யம்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்