பஸ்சில் தொழிலாளியிடம் நகை-பணம் திருட்டு

தர்மபுரியில் பஸ்சில் தொழிலாளியிடம் நகை-பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-07-19 22:35 IST

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள மேல் ஈசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி. தொழிலாளி. இவர் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.7,500 மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் அதை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்