திண்டிவனம் அருகே மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு

திண்டிவனம் அருகே மின்வாரிய அலுவலகத்தில் பொருட்கள் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-07-11 21:48 IST

மயிலம்,

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊழியர்கள் பூட்டிவிட்டு, சாவியை கதவின் அருகில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சோ்ந்த மகேஸ்வரி என்பவர் அலுவலகத்தை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது மேஜையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன. மேலும் அலுவலகத்தில் இருந்த 2 கணினிகள் மற்றும் அவைகள் சம்பந்தப்பட்ட பொருட்களை காணவில்லை. அவற்றை யாரே மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல் மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் வாசு மகன் குப்பன் (வயது 43). பா.ஜ.க. மயிலம் ஒன்றிய துணைத்தலைவரான இவர்,  தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் சாமி படத்தின் அருகே பர்சில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. அதனையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்த தனித்தனி புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்