மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு

வாசுதேவநல்லூர் மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு;

Update:2022-07-03 21:39 IST

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் சுவாமி கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வணிக வைசியர் தெருவை சேர்ந்த மாரியப்பன் மனைவி லட்சுமி (வயது 70) என்பவரும் வந்திருந்தார். அப்போது அவருடைய கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்