பெட்டிக்கடையை உடைத்து ரூ.9 ஆயிரம் திருட்டு

பெட்டிக்கடையை உடைத்து ரூ.9 ஆயிரம் திருட்டு போனது.;

Update:2022-11-07 00:15 IST

ராமநாதபுரம்

கோவை - திருச்சி ரோடு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). இவர் தனது பெட்டிக்கடையில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். அவர், நேற்றுமுன்தினம் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ.9 ஆயிரம் ரொக்கம் மற்றும் பீடி, சிகரெட் பண்டல்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்